லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி அக்டோபர் 3, 2014ல் ஆஸ்டின் நகரில் நடைபெற்றது. 100 சதவீதம் இசை கருவிகளை பயன்படுத்தி மட்டுமே பாடும் லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினர் பின்னணிப் பாடகர்களான க்ரிஷ், வேல்முருகன், மாலதி லஷ்மன் மற்றும் சூப்பர் சிங்கர்கள் சாய்சரண், அனு, அனிதா ஆகியோருடன் வந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
புதிய மற்றும் பழைய திரைப்பட பாடல்கள், மெலடி மற்றும் குத்து பாட்டு என்று பலவகையான திரும்ப திரும்ப கேட்க சொல்லும் ஹிட் பாடல்களை சுவாரசியமான முறையில் வழங்கினார்கள். சில பல பாடல்கள் மற்றும் பின்னணி இசை பார்க்க வந்த ரசிகர்களை மேடைக்கு முன்வந்து ஆட தூண்டும் வகையில் நன்றாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில் குறிபிட்டு சொல்ல வேண்டிய சில நிகழ்வுகள் இவை:
1) பாடகர் க்ரிஷ் பாடல்களால் மட்டும் அல்லாமல் தனது ஜன ரஞ்சகமான பேச்சாலும் அனைவரையும் கவர்ந்தார்.
2) பாடகி மாலதி லக்ஷ்மன் கே.பி. சுந்தராம்பாளின் அச்சு அசல் குரலில் பாடிய ‘பழம் நீயப்பா’ அனைவரையும் மனம் நெகிழ வைத்தது.
3) பாடகர் வேல் முருகன் க்ரிஷ் உடன் இனைந்து பாடிய ‘வேணாம் மச்சான் வேணாம்’ அரங்கம் நிறைந்த கரகொசம் எழுப்பியது.
4) மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் இசை குழுவை சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 10-15 நிமிடங்கள் அடித்த “drum beats ” குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெரியவர்கள் என்று அனைவரையும் பிரமிக்கவைக்கும் வண்ணம் இருந்தது. பலர் அவர் வாசித்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்தனர்.
பாடகி மாலதி லக்ஷ்மன் அவர்களும் இனைந்து அழகாக துணை drum வாசித்தது அவரின் பல திறமைகளை காட்டியது.
5) நிகழ்ச்சியை நிறைவு செய்யும் வகையில் திரு. லக்ஷ்மன் அவர்கள் செய்த பல குரல் மிமிக்ரி ஹாஸ்யம் கலந்து மிகவும் அருமையாக இருந்தது.
மொத்தத்தில் இக்குழுவினரின் நிகழ்ச்சி வெறும் இசை நிகழ்ச்சியாக மட்டும் அல்லாமல் பல சுவாரஸ்யங்கள் கலந்த கலவையாக இருந்தது. ஆஸ்டின், ரவுண்டு ராக் மற்றும் சீடர் பார்க்கில் இருந்து சுமார் 250 பேர் வந்து இந்நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் மகிழ்தனர்.