சித்திரைத் திருவிழா 2016 – கண்ணோட்டம்
ஆஸ்டின் நகரின் வசந்த காலத்தை பாரம்பரிய தமிழர் திருவிழா முறையில் கொண்டாடும் விதமாக சித்திரைத் திருவிழா, மே மாதம் 7ஆம் தேதி அன்று ரவுண்ட் ராக் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ் மக்களால் கொண்டாடப் பட்டது.
ஆஸ்டின் தமிழ் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல நூறு நபர்கள் கலந்து கொண்டனர். பதினைந்துக்கும் மேற்பட்ட குழுக்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளால் கோலகலப்படுத்தினர். இன்னிசை, இலக்கியம், நடனம் என்று பல்கலை வித்தகர்களும், ஒரு பக்கம் மக்களை உற்சாகப்படுத்தினர். மறுபுறமோ ஆஸ்டின் தமிழ் பள்ளி குழந்தைகளின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி மற்றும் அவர்களின் குறும்புத்தனமும் விழாக்கோலத்தை மெருகேற்றியது. இது மட்டுமின்றி மதிய உணவு, கரும்புச்சாறு, மாலை நேரத்தில் டீ, பஜ்ஜி, மிக்ஸர் என்று அனைவரும் திருப்தியாக செவிக்குமட்டுமன்றி வயிற்றக்கும் உணவருந்தினர்.
அன்று அன்னையர் தின சிறப்பு அன்பளிப்பாக தமிழ் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு அன்னையருக்கம மல்லிகைப்பூ வழங்கியது, அனைத்துக் குழந்தைகளும் மேடையில் ஏறி, மழலைக் குரலில் அன்னையர்களை வாழ்த்தியது ஒவ்வொரு அம்மாவையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
ஆஸ்டின் தமிழ் சங்க தோட்ட குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக காய்கறி நாற்றுக்களைப் பண்ட பறிமாற்ற முறையில் பறிமாறிக் கொண்டனர். அவரை, பொண்ணாங்கண்ணி, பீர்க்கங்காய், சுரைக்காய், தண்டங்கீரை, கறிவேற்பிலை, கரும்பு, மணத்தக்காளி, நாட்டு மிளகாய், வெண்டை என பட்டியில் நீண்டு கொண்டு போகுமளவிற்கு பல நாற்றுக்களை எல்லோரும் பறிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஆஸ்டின் தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை, முன்னாள் தலைவர் திரு.அன்பு கிருஷ்ணசுவாமி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நிர்வாகக் குழு உருப்பினர்கள் : திரு. சரவணபவன் வைத்தீஸ்வரன் (தலைவர்), திரு. அருள்நம்பி ராஜூ (துணைத் தலைவர்), திருமதி. வைஷ்ணவி ராமானுஜம் (செயலாளர்),திரு.விஜய் பாலசுந்தரம்(பொருளாளர்). இவர்களுடன், புதிய நிர்வாக இயக்குநர்களாக , திரு.அஷோக்குமார் சுப்பிரமணியன், திரு.முரளி தண்டபாணி, திரு.மோகன் கருப்புசாமி, திரு.செல்வகுமார் ஏகாம்பரம், திரு.மணி, திரு.சங்கர் முத்துசாமி , திரு. ராம் ராமச்சந்திரன், திரு. ஜெய் ஆகியோர் பொறுபேற்றுக் கொண்டனர். இந்த நிர்வாகக் குழு அடுத்த ஒருவருடதிற்கு தமிழ் சங்கத்தை நிர்வகிக்கும். திரு. சரவணபவன் அவர்கள், பழைய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்களுக்க் மலர்கொத்துகளை வழங்கினார், மேலும் இவர்கள் அனைவரும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். ஆலோசனைக் குழுவில், திரு.அன்பு கிருஷ்ணசுவாமி , திரு.சங்கர் சிதம்பரம், திருமதி.சுகந்தி கோவிந்த் , திரு. பாலா பெத்தண்ணன் , திரு.சின்னா நடேஷன் , திரு.கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.