ஆஸ்டின் தமிழ் சங்கத்தின் கோடைக்காலக் கொண்டாட்டம் (summer fest- 2013) மே மாதம் 19ஆம் தேதி சீடர் பார்க்கில் உள்ள ஷிர்டி சாய் பாபா கோவிலின் அரஙத்தில் கோலாகலமாக நடைபெடற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக Dr.சிங்கார வடிவேல், Dr.கார்த்திககேயணி, Dr.சதீஷ் திருமலை மற்றும் திரு.சின்ன நடேசன் தலைமை ஏடற்றார்கள்.
இவ்விழாவில் கண்களுக்கும் காதுகளுக்கும் இனிமை தரும் வண்ண்ம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடுவர் கிருஷ்ணா ஷங்கர் தலைமையில் நடந்த “சினிமா சாதனையா? சோதனையா? “ என்ற நகைச்சுவை பட்டிமன்றம் சினிமா நம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பையும் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட விழிப்புணர்வையும் நமக்கு எற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை.
சான் ஆண்டானியோ தமிழ் சங்கத்தின் குழுவினர் நடத்திய ”வடை போச்சே” நாடகம் இளைஞர்களுக்கு சிறந்த கருத்தை நகைச்சுவை ததும்ப அள்ளி தந்தது.
மேலும் சிறுமியர்களின் புஷ்பாஞ்சலி, பெண்களின் நாட்டியம், மாறுவேட போட்டி, ஆத்திச்சூடி போன்ற தமிழ் பாடல்கள் ஒப்பித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஆஸ்டின் தமிழ் சங்க மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நல்லதொரு ஆரம்பமாக தொடங்கி இனிதே நடந்த இந்த விழாவினை கண்டு களித்த நம் ஆஸ்டின் மக்களுக்கு இனியதொரு மாலை பொழுதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம்.