குறள் தேனீ 2019 வெற்றியாளர்கள்

வணக்கம்,

சிக்காகோ மாநகரில் நடைபெற்று கொண்டிருக்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பேரவை 2019 (FETNA 2019 from Jul 4 – 7) விழாவில் நடைபெற்ற குறள் தேனீ போட்டியில் கலந்து கொண்ட நமது ஆஸ்டின் மாநகரை சேர்ந்த செல்வி. சுனந்தித்தா, செல்வி. வர்ஷா மற்றும் செல்வன். கார்த்திக் ஆகியோரை ஆஸ்டின் தமிழ் சங்கம் பாராட்டி மகிழ்கிறது.

கனிகள் பிரிவில் முதல் பரிசை வென்ற செல்வி. சுனந்தித்தா மற்றும் நான்காம்  இடம் பிடித்த செல்வி. வர்ஷாவிற்கும்,  மலர்கள் பிரிவில்  ஐந்தாம் இடம் பிடித்த செல்வன். கார்த்திகேயன் அவர்களுக்கும் ஆஸ்டின் தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

குழந்தைகளை ஊக்குவித்த பெற்றோர்களையும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் போட்டிகளை நடத்தி குழந்தைகளை உற்சாகப்படுத்தும் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளிக்கும் பாரட்டுக்களையும் நன்றியையும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது.

சென்ற ஆண்டு ஆஸ்டின் தமிழ்ப் பள்ளியை சேர்ந்த செல்வன். சாய் ஹர்ஷன் குறள் தேனீ போட்டியில் பரிசு வென்றது குறிப்பிடதக்கது.

மென்மேலும் தமிழ் மற்றும் திருக்குறள் படித்து வளர ஊக்குவிக்கும் பெருமைமிகு அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்!!

நன்றி

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.

Subscribe to our Newsletter!!

[mc4wp_form id="8712"]