தீபாவளி மகா கொண்டாட்டம்
Deepavali Mahakondattam
Sat Dec 5, 2026 2:00 PM – 9:00 PM CST
தீபாவளி மகா கொண்டாட்டம் 2026 – ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் 35-ஆம் ஆண்டு விழா🪔
அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் 2026ஆம் ஆண்டு தீபாவளி மகா கொண்டாட்டம் இதோ நெருங்கி விட்டது!
சனிக்கிழமை, டிசம்பர் 5, 2026 அன்று பலவிதமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவைமிக்க பாரம்பரிய உணவுகள் நிறைந்த ஒரு கோலாகலமான நிகழ்வைத் திட்டமிட்டுள்ளது ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்.
எப்பொழுதும் போல், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் நண்பர்களையும் இந்த நிகழ்வில் சந்தித்து, இந்தத் தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் உங்களை அன்புடன் அழைக்கிறது.
✨ நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
📅 நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 5, 2026
🕑நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
🚪 அரங்கத்தினுள் நுழைய அனுமதி: மதியம் 1:00 மணி முதல் (முதலில் வருபவர்களுக்கு முதல் பந்தியில் உணவு)
🎭 ஆஸ்டின் தமிழ் மக்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள்
📍 இடம்: டிராவிஸ் கவுண்டி எக்ஸ்போசிஷன் சென்டர், 7311 டெக்கர் லேன், ஆஸ்டின், டெக்சஸ் 78724
📋 விதிமுறைகள்
- சலுகை விலை நுழைவுச் சீட்டுகள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
- கலை நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் உட்பட அனைவரும் நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும்.
- ஆயுட்கால உறுப்பினர் நுழைவுச் சீட்டுகளுக்குச் செல்லுபடியாகும் ATS ஆயுட்கால உறுப்பினர் எண் தேவை. அதைச் சரிபார்க்க இயலவில்லை என்றால், எண்ணைத் திருத்தவோ அல்லது நுழைவுச் சீட்டு விலை வித்தியாசத்தைச் செலுத்தவோ ATS உங்களைத் தொடர்புகொள்ளலாம்.
- ஒரு முறை வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகளுக்குப் பணம் திருப்பித் தரப்படாது; அவற்றைப் பிறருக்கு மாற்றவும் இயலாது. நிகழ்ச்சி வழிகாட்டுதல்களில் குறிப்பிட்டுள்ளவை (எ.கா., ATS நிகழ்ச்சியை ரத்து செய்தாலோ ஒத்திவைத்தாலோ) இதற்கு விதிவிலக்கு.
- மாலை 3:00 மணிக்கு செக்-இன் முடிவடைகிறது. மாலை 3:00 மணிக்குப் பிறகு ரிஸ்ட் பேண்ட் மற்றும் உணவு டோக்கன் வழங்கப்படமாட்டாது.
- பந்தி உணவு மற்றும் (குறைந்த எண்ணிக்கையில்) பெட்டியில் எடுத்துச் செல்லும் உணவு என இரண்டு விதங்கள் உள்ளன. உங்களுக்கு விருப்பமான ஒன்றை மட்டும் நுழைவுச் சீட்டு வாங்கும்போது தேர்ந்தெடுக்கலாம்.
- குழந்தைகள் எப்போதும் பொறுப்புள்ள ஒரு பெரியவருடன் இருக்க வேண்டும்.
- நுழைவுச் சீட்டு வாங்குவதன் மூலம், ஊடக ஒப்புதல் உட்பட, ATS நிகழ்ச்சி வழிகாட்டுதல்கள், நுழைவுச் சீட்டு மற்றும் பணத்திருப்பக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள். பணம் செலுத்தும்போது இவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படும்.
கொடை வள்ளல்: இந்தப் பங்களிப்பில் தனிநபர்களும் குடும்பங்களும் கலந்துகொள்ளலாம். பங்களிப்பு $100 முதல் தொடங்குகிறது; அதற்கு மேலான எந்தத் தொகையும் வரவேற்கப்படுகிறது. பங்களித்த தொகையைப் பொறுத்து கொடை நிலை அமையும். இவை இந்த நிகழ்ச்சிக்கான பங்களிப்புகள் மட்டுமே; ஆண்டு வணிக நிதி ஆதரவு (sponsorship) அல்ல. நிகழ்ச்சி நுழைவுச் சீட்டுகளைத் தனியாக வாங்க வேண்டும்.
திட்டமிடப்பட்டுள்ள அங்கீகாரங்கள்:
- நள்ளி: டிஜிட்டல் நன்றி; ATS நன்றிப் பட்டியலில் பெயர்; நிகழ்ச்சி நன்றித் திரைக்காட்சியில் (slide) பெயர்.
- காரி: நள்ளி நிலையின் அனைத்து அங்கீகாரங்களும் + மேடையில் கூட்டு நன்றி.
- பாரி: காரி நிலையின் அனைத்து அங்கீகாரங்களும் + சிறப்புப் புரவலர் பட்டியலில் இடம்.
- அதியமான்: பாரி நிலையின் அனைத்து அங்கீகாரங்களும் + 35-ஆம் ஆண்டு விழாச் சிறப்பு நன்றி.
🪔 Austin Tamizh Sangam Deepavali Mahakondattam 2026 – 35th Anniversary 🪔
Our much-awaited Deepavali Mahakondattam 2026 is almost here! Austin Tamil Sangam is planning a grand celebration filled with cultural programs and delicious traditional food.
As always, we warmly invite you, your family and your friends to join us and celebrate this Deepavali with much pomp and joy!
✨ Event Details
📅 Date: Saturday, December 5, 2026
🕑 Time: 2:00 PM – 9:00 PM
🚪 Doors open: 1:00 PM (first come, first served for the first dinner seating)
🎭 Multi-talent show by Austinites (songs, dance, orchestra)
📍 Venue: Travis County Exposition Center, 7311 Decker Ln, Austin, TX 78724
📋 General Rules
- Limited Early Bird tickets available.
- All performers and volunteers must buy tickets.
- Lifetime category tickets require a valid ATS Lifetime Membership ID. If it cannot be verified, ATS may contact you to correct it or pay the ticket price difference.
- Tickets once issued are non-refundable and non-transferable, except as described in the Event Guidelines (e.g., if ATS cancels or postpones the event).
- Check-in ends at 3:00 PM. No wristbands or food tokens will be given out after 3:00 PM, so please check in before then.
- There are two dinner options: “Dine-in” and a limited number of “To Go” meals. You can choose one when you buy your ticket.
- Children must be accompanied by a responsible adult at all times.
- By purchasing a ticket, you agree to the ATS Event Guidelines, Ticketing and Refund Policy, including media consent. You will be asked to accept these at checkout.
Kodai Vallal: Contribution is open to all individuals and families; contributions start at $100, and any higher amount is welcome. The giving level is based on the amount contributed. These are event-specific contributions, not annual business sponsorships. Event admission tickets must be purchased separately.
Planned recognition:
- Nalli: Digital thank-you; Name on ATS appreciation list; Event appreciation slide.
- Kaari: All Nalli recognition + Collective stage thanks.
- Paari: All Kaari recognition + Featured patron listing.
- Athiyaman: All Paari recognition + 35th anniversary special acknowledgement.