2024 - Aambal Malar Launch & Students Transition

ஆகஸ்ட் 24ஆம் தேதி, சனிக்கிழமை மாலை சீடர் பார்க் பொழுதுபோக்கு மையத்தில் நடைபெற்ற ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் ஆம்பல் மலர் வெளியீட்டு விழா  மற்றும் “மாணவர்களால், மாணவர்களுக்கு – நடுநிலை, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி – ஓர் அறிமுகம்” நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!
ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரும், ஆஸ்டின் ஆம்பல் மலரின் ஆசிரியருமான திருமதி மகாலெட்சுமி ரமேஷ்பாபுவிடமிருந்து முதல் மலரை பெற்று, ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவர் மற்றும் நிறுவனர் பேராசிரியர் முனைவர் திரு கனகசபாபதி சதாசிவம் அவர்கள் ஆம்பல் மலரை வெளியிட்டார்.
மாணவர்களால், மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் சிறப்பாக உரையாற்றிய  மாணவர்கள் ஜோன் அமல்ராஜ், ஜூடித் அமல்ராஜ், வர்ஷா லதா சக்திவேல், கார்த்தி சக்திவேல், கவியமுதன் கோபிநாதன் ஆகியோருக்கு ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டுகளும், நன்றியும்.