2026 "பல குரல்களில் கவிதை"
ஆஸ்டின் பொது நூலகம் (John Gillum Branch of Austin Public Library) கடந்த சனிக்கிழமை, 25-04-2026 பல குரல்களில் கவிதை (“Poetry in Many Voices”) என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை நடத்தியது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி, தத்தம் மொழிகளில் கவிதைகள் வாசித்த இந்த நிகழ்வு தனித்துவமானதாக இருந்தது.
பல்வேறு நாட்டினரும் தங்களது தாய்மொழிகளில் கவிதைகள் வாசித்ததுடன், அதனை மற்ற நாட்டினரும் ரசித்துக் கரவொலி எழுப்பியது ஒரு புதுமையான அனுபவமாக அமைந்தது. மொழியை அறியாத போதிலும் கவிதைக்கு ஒரு தனிச் சுவை இருப்பதையும், அதை ரசிக்க உயர்ந்த மனம் மட்டுமே போதுமானது என்பதையும் உணர்த்தும் வகையில், உலக மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றிய நிகழ்வாக இது திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.
நம் தமிழ் மொழியுடன் சேர்த்து அரபு, கேண்டனீஸ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பானீஸ், கொரியன், மேண்டரின், ஸ்பானிஷ் , துருக்கி, உக்ரேனியன் மற்றும் வியட்நாமிஸ் போன்ற பல மொழிகளிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் மொழிகளில் பிரபலமான கவிதைகளையும், சிலர் தாங்களே எழுதிய கவிதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக கவிஞர்கள் திரு. ராம் சீனிவாசன் மற்றும் திரு. மீ. மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். கவிஞர் திரு. ராம் அவர்கள், நம் தமிழின் பெருமையான உலகப் பொதுமறை திருக்குறள் குறித்து விளக்கமளித்த பின்னர், முப்பாலிலிருந்தும் ஒரு திருக்குறளைத் தேர்ந்தெடுத்து, முத்தான மூன்று குறள்களைப் பகிர்ந்தார். அதேபோல், கவிஞர் திரு. மீ. மணிகண்டன் அவர்கள் தாம் எழுதிய ‘தமிழள்ளித் தாத் தமிழா’ மற்றும் ‘அக்காவுக்குப் பாசமுடன் தம்பி’ என்ற இரண்டு உணர்ச்சிபூர்வமான கவிதைகளை வாசித்து அனைவரையும் கவர்ந்தார்.
The Austin Public Library (John Gillum Branch) hosted an event titled “Poetry in Many Voices” on Saturday, April 25, 2026. This gathering was truly unique, as individuals from various nations came together in one venue to recite poetry in their respective native languages. It proved to be a novel experience to witness people from diverse backgrounds reciting poems in their mother tongues, while others—regardless of their linguistic background—listened with appreciation and applauded. It would be no exaggeration to describe this event as a celebration of global unity, serving as a powerful reminder that poetry possesses a distinct essence of its own—one that requires nothing more than an open heart to be truly appreciated, even in the absence of linguistic understanding. In addition to our own Tamil language, participants from various countries shared renowned poems—and in some instances, original compositions of their own—in a multitude of languages, including Arabic, Cantonese, French, German, Italian, Japanese, Korean, Mandarin, Spanish, Turkish, Ukrainian, and Vietnamese.
Representing the Austin Tamil Sangam, poets Ram Srinivasan and Mee. Manikandan participated in the event. Poet Mr. Ram began by offering an exposition on the Thirukkural—our globally revered ethical treatise and a source of immense pride for the Tamil language—before selecting one verse from each of its three major divisions – Muppaal to share three exquisite couplets with the audience. Similarly, Poet Mr. Me. Manikandan captivated the audience by reciting two deeply evocative poems he has authored himself: “Tamizhalli Thaa Thamizha” and “Akkavukku Paasamudan Thambi.”


