Indusladies.com – ஒரு தமிழரின் வெற்றிப் பாதை- சிறு கண்ணோட்டம் – மோகன் K

IL_hero-banner

      இந்தியப் பெண்களுக்கான, பிரத்யோகமான தனிப்பட்ட வலைத்தளம் தான் www.indusladies.com

      இந்த வலைத்தளம், இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்குமுள்ள இந்தியப் பெண்களுக்கான தனிப்பட்ட வலைத்தளம் ஆகும். இதன் மூலம் இந்தியப்  பெண்கள் தங்கள் கருத்துக்களை எளிதாக பரிமாறிக் கொள்ளலாம். மேலும் தங்கள் ஊரில் உள்ள மற்ற சக இந்தியப் பெண்களுடனும் தொடர்பு கொள்ளவும் மிக உதவியாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள உள்ளூர் விவரங்கள் குறிப்பாக, இந்திய குடும்பகளுக்கு தேவையான விவரங்களை எளிதாக பரிமாறிக் கொள்ளும் வண்ணம் இந்த வலைத்தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.  இந்த வலைத்தளத்தின் நிறுவனர் ஆஸ்டின் நகரில் வசிக்கும் தமிழ் தம்பதி திருமதி மாலதி மற்றும் திரு ஜெய்.

      திருமதி மாலதி ஜெய் அவர்கள், இங்கே தனது அனுபவம் பற்றிச் சொல்கிறார். “நானும் மற்ற சில பெண்களைப் போல் USA விற்கு H4 விசாவில் தான் வந்தேன். இந்தியாவில் முழு நேரமாக பணியாற்றி விட்டு இங்கே வந்து வீட்டில் வேலையற்று இருப்பதென்பது கடினமான ஒன்றாகும். மேலும் ஆஸ்டின் நகருக்கு புதிது மற்றும் புதிய நண்பர்களை தேட வேண்டிய சூழ்நிலை தான் இது போன்ற ஒரு மேடையை, ஒத்த ஆர்வமுள்ள இந்திய பெண்களை இணைக்கும் மேடையை உருவாக்க அடித்தளமாக அமைந்தது. இதை தொடங்கும் போது ஒரு பொழுது போக்காகத் தான் தொடங்கினேன். அதன் பின், ஜெய் அவர்களுடன் சேர்ந்து இதை ஒரு தனிப்பட்ட தொழிலாக மாற்ற முனைந்தோம். சொந்த தொழில் தொடங்கினால் வேலை மற்றும் குடும்பத்திற்கான நேரத்தை நிலைபடுதலாமென்று நினைத்தேன்காலப்போக்கில் அது சாத்தியமில்லை என்று உணர்ந்தேன்.

        வேலையில் இருக்கும் போது வேலை நேரத்திற்கு பிறகாவது (நீடித்த வேலை நேரமானாலும்), ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால்  சொந்த தொழிலில் , வேலை நேரத்தைப் பிரித்து பார்ப்பதென்பது முடியாத ஒன்றாகும். சுய தொழிலும், ஒரு சில நிறை குறைகளோடு தான் உள்ளது. சுய தொழிலில், நாம் புதிதாக சிலவற்றை உருவாக்கும் பெருமிதம் கொள்ளலாம், வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நன்மையோ தீமையோ, நமது முடிவே நம் தொழிலுக்கான முடிவாகும். ஒரு சில நேரம் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டால் அது சில பின்னடைவில் வந்து முடியும். எங்களுடைய அனுபவத்தின் மூலம் விடாமுயற்சி தான் வெற்றிக்கு அவசியம். சிறுது காலம் ஆனாலும் அந்த முயற்சி வெற்றியை அளிக்கும். பத்து வருடங்களாக அந்த வெற்றியை நோக்கித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் –  Indusladies!”

ஆஸ்டின் வாழ் தமிழர்களுக்கான ஒரு பயனுள்ள தகவல் :

  • ஆஸ்டின் நகருக்கான தனிப்பட்ட வலைத்தளம் www.indusladies.com/austin
  • ஆஸ்டின் நகருக்கு புதிதாக வருபர்களுக்கான வழிகாட்டி
    http://www.indusladies.com/austin/newcomers-guide-to-austin/
  • ஆஸ்டின் நகரில் உள்ள இந்தியப் பெண்களுக்கான, சில சிறந்த பள்ளிகள், வாடகை வீடுகள், குடியிருப்பு பகுதிகள் பற்றிய விவரங்கள் : http://www.indusladies.com/austin/austin-resources/

Austin_Resources

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter!!

Austin Tamizh Sangam
This is default text for notification bar