விதைப் பரிமாற்ற நிகழ்வின் தொகுப்பு சனிக்கிழமை, மார்ச் 14, 2026

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் நடத்திய சமூக விதைப் பரிமாற்ற நிகழ்ச்சி, சனிக்கிழமை, மார்ச் 14, 2026 அன்று பிரஷ்ஷி கிரீக் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, தோட்டப் பணிகள் குறித்த ஆர்வத்தையும், பயனுள்ள தகவல் பகிர்வையும், சமூக இணைப்பையும் ஒருங்கிணைத்த அருமையான சந்திப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியில் விதை விற்பனை, ஆஸ்டின் தமிழ்ச் சங்க இளைஞர் அணியினரின் தகவல் அட்டவணைகள், விரைவான கருத்துக் கணிப்பின் மூலம் வழங்கப்பட்ட இலவச அழுத்தப்பட்ட மண் உருண்டைகள், மற்றும் டிராவிஸ் கவுண்ட்டி மாஸ்டர் கார்ட்னர் பிளாண்ட் கிளினிக் குழுவின் வழிகாட்டுதல் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. மேலும், “காய்கறிப் பாத்தி” அமைத்தல் மற்றும் அதை தொடர்ந்து பராமரிப்பது குறித்த உரைகள் கலந்து கொண்டோருக்கு பயனுள்ளதாகவும், ஊக்கத்தையும் வழங்கின.

இந்த நிகழ்ச்சியின் ஒரு இனிய அம்சமாக, வருகை தந்த அனைவருக்கும் ஸன்ஷய்ன் கம்யூனிட்டி கார்டன்ஸ் வழங்கிய துளசி செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. பலரும் தங்களுடைய விதைகள் மற்றும் செடிகளை பரிமாற்றம் செய்ததுடன், சிலர் அவற்றை விற்பனை செய்தும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினர். அதோடு, ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சார்பில் தேநீர், ஜூஸ், மற்றும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க உதவிய டிராவிஸ் கவுண்ட்டி மாஸ்டர் கார்ட்னர் பிளாண்ட் கிளினிக் குழுவினருக்கும், ஷன்ஷய்ன் கம்யூனிட்டி கார்டன்ஸ் குழுவினருக்கும், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

The Seed Exchange event organized by the Austin Tamizh Sangam was held with great success and vibrant enthusiasm on Saturday, March 14, 2026, at Brushy Creek Park. With around 200 participants, the event blossomed into a lively, meaningful gathering that beautifully combined a shared passion for gardening, the exchange of valuable knowledge, and a strong sense of community.

The event featured several engaging highlights that drew great interest from attendees, including a seed exchange, an informative booth hosted by the Austin Tamizh Sangam Youth Committee, and complimentary peat pellets distributed in exchange for quick survey responses. Adding further value, the Travis County Master Gardener Plant Clinic team provided expert guidance, and presentations on establishing and maintaining vegetable garden beds offered practical insights and inspiration to participants.

A special highlight of the day was the distribution of complimentary Thulasi plants, generously provided by Sunshine Community Gardens, to all attendees. Many participants enhanced the spirit of the event by exchanging their own seeds and plants, while some also offered them for sale, adding to the vibrancy of the gathering. Guests also enjoyed complimentary refreshments, including tea, juice, and chickpea sundal, courtesy of the Austin Tamizh Sangam.

The Austin Tamizh Sangam extends its heartfelt gratitude to the Travis County Master Gardener Plant Clinic team, Sunshine Community Gardens, the dedicated volunteers, and everyone who attended for their invaluable support in making this event a truly memorable and resounding success.

Click below to access more photos