2025 ATS Ramadan Meet Event

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், ஏப்ரல் 20ம் நாள் ரமலான் பெருநாள் கொண்டாட்டத்தை கேட் ஹாலோ பூங்காவில் கொண்டாடியது. ஜனாப் ஷேக் மொஹ்சீன் அவர்கள் ரமலான் பண்டிகை குறித்து அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். விருந்தினர்கள் ரமலான் நோன்புக் கஞ்சி மற்றும் பலவிதமான பாரம்பரிய ரமலான் உணவு வகைகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பலரும் பங்கேற்று விழாவை மேலும் சிறப்பித்தனர்.

ரமலான் என்றாலே ஈகை எனும் கருத்தை மேலும் வலியுறுத்தும் வகையில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “தேவைப்படுவோருக்கு உணவு சேகரிப்பு” நிகழ்ச்சி மூலம் கிடைக்கப்பெற்ற அனைத்து உணவுப் பொருட்களும் சென்ட்ரல் டெக்சாஸ் உணவு வங்கியின் ரவுண்டு ராக் கிளையில் வழங்கப்பட்டது. ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் வாக்களித்தபடி மக்கள் வழங்கிய உணவுப்பொருட்களின் மதிப்பிற்கு இரண்டு மடங்காக $1,000.00 தொகையைக் காசோலையாகவும் வழங்கியது.

Austin Tamizh Sangam celebrated Ramadan at Champions Park on April 20. Janab Sheikh Mohseen provided an insightful explanation of Ramadan’s significance, promoting unity and understanding. The event featured fasting porridge, traditional dishes, and desserts, creating a memorable experience. Demonstrating their dedication to community service, ATS organized a food drive, delivering donations to the Round Rock Serving Center. Additionally, ATS doubled the value of the food donations and contributed a $1,000.00 check.