ATS அன்னையர் தினம் மற்றும் நிமிடத்துக்கோர் குறள் நிகழ்ச்சி சுருக்கம்

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” – 101

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய நிமிடத்துக்கோர் குறள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 133 அதிகாரத்திலிருந்தும் 4-ஆவது குறளை பொருளுடன் சொல்லி இந்த அன்னையர் தின கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள். குழந்தைகளும், பெரியவர்களும் சேர்ந்து இந்த அன்னையர் தினத்தில் குறளையும், அதன் பொருளையும் சொல்லிய பின் ATS வழங்கிய அழகிய நினைவுப்பரிசை ஒவ்வொரு பங்கேற்பாளரும் தம் அன்னையருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை நிறுவனர் திருமதி. மாலா கோபால் மற்றும் குழுவினருக்கும், நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தைகள், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று இந்த சாதனையில் இடம்பெற தங்கள் பள்ளி மாணவர்களை ஊக்குவித்த ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி, ஆஸ்டின் செந்தமிழ் கல்விக்கூடம், மத்திய டெக்சாஸ் தமிழ் கழகம், தெற்கு ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி, மேற்கு ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி மற்றும் உதவி செய்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும்.