Day: 
Saturday, May 3, 2025

Venue:
Unity Church of the Hills
9905 Anderson Mill Rd Austin, TX 78750

2025 சித்திரைத் திருவிழா

இந்த சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த அனைத்து கலைநிகழ்ச்சி குழுவினர்களுக்கும், இசைஞானியின் கச்சேரிக்கு ஈடாக இசை மழையில் நனைய வைத்த இசை துளி குழுவினர், ஏ.டீ.எஸ். அங்காடி, ஏ.டீ.எஸ். தேநீர்க் கடை, ஏ.டீ.எஸ். விளையாட்டு மையம், ஏ.டீ.எஸ். பரிசு பெறும் இடம், ஏ.டீ.எஸ். புகைப்பட அரங்க அலங்காரம் செய்த மெமரபல் பார்ட்டி டெக்கர் சர்வீஸ் (Memorable Party Decor Service) குழுவினருக்கும், நுழைவு வாயில் செக் இன், பேக் ஸ்டேஜ் செக் இன், ஓசை தொழில்நுட்ப உதவி என அனைத்து ஏ.டீ.எஸ். மையங்களிலும் தன்னலமற்று சேவை செய்த அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

பிரமாதமான நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகச் செயல்பட்ட பாலாஜி, அசோக், ரூப்பா ஆகியோருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழ்நாட்டின் பிரத்தியேகமான உணவு பண்டங்களை ஆஸ்டினிலேயே சுவைக்க வைத்து சிறுவயது நினைவுகளைக் கொண்டு வந்த உணவு விற்பனையாளர்கள், மற்றும் வருடாந்திர புரவலர்கள் (ஸ்பான்ஸர்கள்), பிற விற்பனையாளர்கள் அனைவருக்கும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் அளவில்லா நன்றிகள்.

அனைத்திற்கும் மேலாக இந்த சித்திரைத் திருவிழாவிற்கு நேரில் வந்து ஆதரவு அளித்து ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தை ஊக்கப்படுத்திய அனைத்து பார்வையாளர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.