வரலாற்று ஆய்வாளர் திரு. இரா. மன்னர் மன்னன் அவர்கள் பங்குபெற்ற "சந்திப்போம் சிந்திப்போம்" நிகழ்ச்சி சுருக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 25-ஆம் தேதியன்று ப்ருஷ்ஷி க்ரீக் சமூக கூடத்தில் வரலாற்று ஆய்வாளர் திரு. இரா. மன்னர் மன்னன் அவர்களுடன் ஒரு சிறப்பு சந்திப்பு நடைபெற்றது.  நம் தமிழ் வரலாற்றைப் பற்றி அழகாகவும், எளிமையாகவும் எடுத்துக் கூறி, பார்வையாளர்களுக்குத் தமிழின் மீதும், வரலாற்றின் மீதும் மேலும் ஈடுபாடு  வரவழைத்தார். பார்வையாளர்களின் கேள்விகளுக்குத் தெளிவாகவும் வரலாற்றுச் சான்றுடனும் நன்கு விளக்கம் அளித்தார். ஆராய்ச்சியாளர் மற்றும் நாணயவியலாளர் திரு. இரா . மன்னர் மன்னர் அவர்களுக்கும்,வருகை தந்த அனைவருக்கும் , இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கிய  தன்னார்வ தொண்டர்களுக்கும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் நன்றிகள்!